விபத்தில் சிக்கி மூக்கில் படுகாயம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் ஷாரூக்கான்..!!

பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டடதால் , மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. 
 

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாரூக்கான் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பதான் படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அவர் தமிழ் சினிமாவைச் சேர்ந்த அட்லீ இயக்கத்தில் ஜவான் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நயன்தாரா, ப்ரியாமணி மற்றும் சான்யா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளிவரவுள்ளது. இந்த படத்துக்கு பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது ஷாரூக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் டங்கி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடிக்கிறார். அமெரிக்காவில் படத்துக்கான ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்த் வருகின்றன.

வழக்கம்போல நடந்த படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நேர்ந்த விபத்தில் ஷாரூக்கானுக்கு காயம் ஏற்பட்டது. குறிப்பாக மூக்குப் பகுதி பெருத்த சேதமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சர்ஜரி மேற்கொள்ளப்பட்டு, உடல் சீரடைந்துள்ளது. மேலும் ஷாரூக்கான் இந்தியாவுக்கு திரும்பி விட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த ஷாரூக்கான் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.