DACOIT திரைப்படத்தின் புதிய கதாநாயகி இவர் தான்... அப்போ ஸ்ருதிஹாசன் இல்லையா..?
Dec 18, 2024, 06:05 IST
நடிகர் அதிவி சேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டகோயிட்'. இத்திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசன் ஹீரோயினியாக கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் முக்கிய ஹீரோயின் கமிட்டாகி உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன்- நடிகர் அதிவி சேஷ் திரைப்படத்தில் நடித்து வந்தநிலையில் சில காரணங்களுக்காக அவர் படத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தில் கதாநாயகியாக மிர்னால் தாகூர் இணைந்துள்ளார்.
இந்நிலையில் 'டகோயிட்' படக்குழு மிர்னால் தாகூர் கையில் துப்பாக்கியுடன் காரில் கோபமாக இருக்க, பக்கத்தில் நடிகர் அதிவி சேஷ் சிக்ரெட் பிடிப்பது போன்றும் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை மிருணாள் தாக்கூர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை மிருணாள் தாக்கூர் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வாழ்த்து கூறிவருகிறார்கள். இதோ அந்த வைரல் போஸ்டர்.