குக் வித் கோமாளியை விட்டு வெளியேறும் ஷிவாங்கி..??
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பெரும் பார்வையாளர்கள் வட்டம் உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
முந்தைய சீசன்களில் மிகவும் வரவேற்பு பெற்ற கோமாளியாக இருந்தவர் ஷிவாங்கி. நடப்பு சீசனில் அவர் சமையலராக (குக்)பதவியேற்றுவிட்டார். தற்போது 20 எபிசோடுகள் கடந்து நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், வி.ஜே. விஷால் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஷிவாங்கி தான் காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கு பதிலளித்த ஷிவாங்கி, நாங்கள் நிறைய உழைக்கிறோம், யாரும் சாதாரணமாக வெற்றி பெறுவது கிடையாது என்று பதிவிட்டார்.
இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், ஷிவாங்கியை வெளியேற அவரது அம்மா பின்னி வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு ஷிவாங்கி வந்துவிட்டால், அவரால் இசைத்துறையில் கவனம் செலுத்த முடியும் என்பது பாடகி பின்னியின் எண்ணமாக உள்ளது.
எனினும் ஷிவாங்கிக்கு அதுபோன்ற எண்ணம் இன்னும் உருவாகவில்லை. அவர் நிகழ்ச்சியில் தொடரவே விரும்புகிறார். தற்போது அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு அமைந்து வருகிறது.