பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல் : மேக்கப்மேன்களிடம் தான் நடிகைகள் முதலில்...

 
நடிகை ஆக வேண்டும், புகழ் பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஏகப்பட்ட இளம் பெண்கள் சினிமாவுக்கு வரும் நிலையில் அவர்கள் சூழ்நிலை காரணமாக அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொண்டு வாய்ப்புகள் பெற்று வருவார்கள் என்பதும் பல நடிகைகள் ஒப்புக்கொள்ளாமல் திரையுலகில் இருந்து விலகி விடுகின்றனர். ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொள்ளாமல் பெரிய நடிகையானவர்களும் உண்டு.

இந்த நிலையில் டாக்டர் காந்தாராஜ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா துறையில் ஒரு நடிகை தனது கற்பை முதலில் இழப்பது மேக்கப்மேனிடம் தான் என்று கூறியுள்ளார். ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாகும் போது அவருக்கு எந்த உடை செட் ஆகும் என்பதை அறிய முதலில் மேக்கப்மேனிடம்  தான் இயக்குனர் அனுப்பி வைப்பார். அவர் அந்த நடிகையிடம் உனக்கு எந்த உடை செட் ஆகும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றால் உடம்பு முழுவதையும் பார்க்க வேண்டும் என்று நிபந்தனை வைப்பார் என்றும் அதற்கு பல நடிகைகள் ஒப்புக்கொள்வதாகவும் நடிகைகள் முதலில் பலிகடா ஆவது மேக்கப்மேனிடம் தான் என்றும் கூறியுள்ளார்.

திரை உலகை பொறுத்தவரை நடிகைகளின் ஆயுட்காலம் குறைவு என்பதால் குறைந்த வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதித்து விட வேண்டும் என்பதற்காக பல அட்ஜஸ்ட்மென்ட் களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆனால் அப்படிப்பட்ட சம்பாத்தியம் தேவையில்லை என்று பல நடிகைகள் திரை உலகை விட்டு விலகி சென்று விடுகிறார்கள் என்றும் டாக்டர் காந்தாராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.