காதலரை பக்கத்தில் வைத்து கிரெஷ் பற்றி பேசிய ஸ்ருதிஹாசன்..!!

மும்பையில் காதலருடன் லிவிங் டுகெதரில் இருக்கும் ஸ்ருதி ஹாசன், ஒரு சினிமா நடிகர் மீதான தனது முதல் கிரெஷ் குறித்து வெளியிட்டுள்ள செய்தி சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 
 

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், கலிஃபோர்னியாவில் இசை பயின்றார். அதை தொடர்ந்து ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான அவருக்கு, பாலிவுட்டில் பெரியளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு தமிழில் தயாரான ‘ஏழாம் அறிவு’ படத்தில் நடித்தார்.

உலக நாயகனின் மகனுக்கு தாய் மண்ணிலும் பெரியளவில் படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்குப் படங்கள் அப்படியில்லை. ஸ்ருதி ஹாசனை கொண்டாடின. இதன்மூலம் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இப்போது அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்’ படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். அவருடன் தற்போது ஸ்ருதி மும்பையில் லிவ்விங் டுகெதரில் இருக்கிறார். 

இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய முதல் கிரெஷ் குறித்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் ப்ரூஸ் லீ மீது தான் கிரஷ் முதலில் வந்தது என அவர் கூறி உள்ளார். சீனாவைச் சேர்ந்த ப்ரூஸ் லீ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார்.

பிறகு தன்னுடைய தாயகம் திரும்பிய அவர், பெரும் நடிகராக உருவெடுத்தார். அதிரடியான த்ரில்லர் படங்கள் என்றால், இன்றும் சினிமா ரசிகர்கள் விரும்புவது ப்ரூஸ்லியின் படங்கள் தான். திருமணமான சில ஆண்டுகளில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். அவருடைய ரசிகையாக ஸ்ருதி ஹாசன் இருப்பதில் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது தானே.