ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்..!! பியர் பிடிக்குமா? விஸ்கி பிடிக்குமா?

 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றன.

இதனால், நடிகை ஸ்ருதிஹாசன் ஆனந்தத்தில் உள்ளார். இந்நிலையில், ரசிகர்களுடன் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ எனப் பதிலளித்துள்ளார். 

மேலும், ஸ்ருதிஹாசனின் இந்த பதில் குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.