‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன்..?

 

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதோடு ‘கைதி'க்கு அடுத்து அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் ரஜினி ஒதுங்க, கமல்ஹாசனே நடிக்க ‘விக்ரம்' உருவானது. 

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ ஹிட்டைப்பார்த்த ரஜினிகாந்த் மீண்டும் லோகேஷிடம் கதை கேட்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகச் சொல்ல ஆரம்பமானது ‘கூலி'. தேனியைச் சேர்ந்த கூலிப்படைத்தலைவனின் கதைதான் ‘கூலி'.

இதில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் தயாரித்த மியூசிக் ஆல்பத்தில் ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. லோகேஷுடனான நட்பால்தான் ‘கூலி' படத்தில் அவர் நடிக்கத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் பரவ, ‘’படம் பார்க்கும்போது ஸ்ருதிஹாசன் ஏன் இந்தப் படத்துல நடிச்சாங்கன்னு எல்லாருக்கும் புரியும்'’ என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் லோகேஷ்!