இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் சிம்பு பேச்சு…!
மாநாடு ரிலீஸை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு.
இத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒபேலி கிருஷ்ணா இயக்கிய கன்னட ரீமேக் படமான பத்து தல திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிம்பு. இத்திரைப்படம் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாத நிலையில், சிம்பு அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, வாக்களிக்க வராதது தவறு தான், அதை நான் ஒப்புக்கொள்கிறேன், படப்பிடிப்பில் சிக்கிக்கொண்டதால் வாக்களிக்க வரமுடியவில்லை என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.