சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஜப்பானில் வெளியாகிறது..! 

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இந்த படம் சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.