கண்ணீருடன் சிம்ரன் எமோஷ்னல் பதிவு! வலது கையை இழந்துவிட்டேன்..!

 

தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தவர் நடிகை சிம்ரன். 1995-ல் வெளியான ‘சனம் ஹர்ஜாய்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் தோல்வி அடைந்த நிலையில், அதே ஆண்டு இறுதியில் வெளியான ‘தேரே மேரே சப்னே’ படம் வெற்றி படமாக அமைந்தது.

இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். 1997-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைதொடந்து பூச்சூடவா, விஐபி, நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.

2000-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் சிம்ரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது, சில காதல் சர்ச்சைகளில் சிக்கிய சிம்ரன், 2003-ம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பர் தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

இதற்கு பின்னணியில் அவருக்கு உறுதுணையாக நின்று படங்களை தேர்வு செய்து கொடுப்பதில் அவரது மேலாளர் காமராஜன் என்பவர் பக்கபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காமராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி காமராஜன் மறைவுக்கு நடிகை சிம்ரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்ப முடியாத அதிர்ச்சி தருகின்ற ஒரு செய்தி. என்னுடைய அன்பு நண்பர் எம்.காமராஜன் இப்போது இல்லை.. கடந்த 25 வருடங்களாக எனது வலது கையாக, எனக்கு ஆதரவுத் தூணாக எப்போதுமே சிரித்த முகத்துடன் ஒரு புத்திசாலித்தனமான நம்பகத்தன்மை கொண்ட மனிதராக வலம் வந்தவர். அவர் தன்னை தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் இல்லாமல் சினிமாவில் எனக்கு எதுவுமே சாத்தியம் ஆகி இருக்காது. உங்களது வாழ்க்கை பல பேருக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது. உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களை நேசிப்பவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. ஓம் சாந்தி..” என்று கூறியுள்ளார் சிம்ரன்.