சிறுத்தை பட குழந்தை எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க..!!
சிவா இயக்கத்தில் வெளியான ‘சிறுத்தை’ படத்தில் கார்த்தியின் மகளாக திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி, தற்போது வளர்ந்துவிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Mar 25, 2023, 09:05 IST
கடந்த 2011-ம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘சிறுத்தை’. இந்த படத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம், மனோபாலா, அவினாஷ், மயில்சாமி, பானு சந்தர் உள்ளிட்டோர் முக்கிய நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சிறுத்தை படத்தில் திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் ரக்ஷ்னா என்கிற சிறுமி நடித்திருந்தார். அவருக்கு படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருந்தது.
அப்போது குழந்தை நட்சத்திரமாக இருந்தவர், இப்போது நெடு நெடுவென வளர்ந்து ஆளே அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இப்போது நன்றாக வளர்ந்துவிட்ட ரக்ஷ்னாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.