சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் தங்கச்சியோட எப்படி இருக்காங்க பாருங்க.. !
நடிகை மிருணாள் தகூர் தெலுங்கு படமான சீதா ராமம் படத்தில் நடித்தன் மூல தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.இந்தப் படம் தமிழில் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதால், தமிழில் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.அந்தப் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பினால் தான் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றினார்.
இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைப் பருவத்தில் தனது தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அவரும் அவரது தங்கையும் செம க்யூட்டாக உள்ளனர்.
மேலும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த மிருணாள், தனது தங்கை குறித்து மிகவும் எமோஷ்னலாக எழுதிப் பகிர்ந்துள்ளார்.அதில் தனது சிறுவயதில் இருந்து எனது சகோதரியாக, தோழியாக நடன இயக்குநராக இருக்கின்றாய். இன்றைக்கு நான் எட்டியுள்ள உயரம் உன்னால் ஏற்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுள்ளார்.
அதேபோல் அவரது தொலைக்காட்சி காலங்களில் தொடங்கி இப்போதுவரை மிருணாள் தாகூரின் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக அவரது தங்கையே இருந்து வருகின்றார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.