ரஜினியை பதம்பார்க்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் வெளியாகும் அதேநாளில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். திறமை இருந்தால் நிச்சயம் வெற்றிப் பெறலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். 

தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெற்று வரும் இவர், தொடர்ந்து முதல்நிலை நடிகர்களுக்கு சவால் விடும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக விஜய் படங்களில் இருக்கும் சாயலை, தன் படங்களில் தொடர்ந்து பின்பற்றி வரும் சிவகார்த்திகேயன், இப்போது ரஜினியை ஃபாலோ செய்ய துவங்கிவிட்டார்.

அவர் முன்னதாக நடித்த் ப்ரின்ஸ் திரைப்படம் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருடைய படங்களின் சாயலை கொண்டிருக்கும். அதேபாணியில் மாவீரனும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ப்ரின்ஸ் படம் தனியாக வந்து படுதோல்வி அடைந்தது. இதுவரை யாருக்கும் அப்படியொரு படம் வந்தது கூட தெரியாது.

ஆனால் அதேநிலை மாவீரன் படத்துக்கு கிடைக்கக்கூடாது என்று சிவகார்த்திகேயன் விரும்புகிறார். அதனால் இந்த படத்தை ஆகஸ்டு 11-ம் தேதி வெளியிட அவர் பெரிதும் முனைப்பு காட்டி வருகிறார். அதற்கு காரணம் அதேநாளில் தான் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் ஜெயிலர் படக்குழு இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார். ஏற்கனவே இருவரும் டாக்டர் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தனது நண்பனின் படத்துக்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் களமிறங்க முடிவு செய்துள்ளார்.