மனைவிக்கு அமரன் கெட்டப்பில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்..! 

 

கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ள படம் அமரன்.  

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அமரன் கதாபாத்திரத்தின் உடையில் அவர் மனைவிக்காகச் சுவாரஸ்யமான பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், அமரன் கதாபாத்திர கெட்டப்பில் மனைவியுடன் சந்தோஷமாக நிற்கும் சிவகார்த்திகேயன், சிறப்பான நடிப்புடன், தனக்கே உரிய நகைச்சுவை அனுபவத்தையும் சேர்த்து, மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார். குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கும் விதமாக அவர் மேற்கொண்ட இந்த செயல், அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.