ஏகன் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்..!
தொலைக்காட்சியில் பயணத்தைத் தொடங்கி தற்போது உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவராக வெற்றிப்பாதையை உருவாக்கி அதில் வீறுநடை போட்டு செல்கிறார் சிவகார்த்திகேயன்.
கல்லூரி படிக்கும் போது பல கலை நிகழ்ச்சிகளிலும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வது, மிமிக்ரி செய்வது என பல விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி நண்பர்கள் அறிவுறுத்த மூன்று மாதங்களுக்கு கல்லூரி படிப்பிலிருந்து பிரேக் எடுத்து அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய ஆரம்பமாக அமைந்துள்ளது
இயக்குனர் அட்லி அவரது ஆரம்பகால கெரியலில் இருந்தார். அப்போது குறும்படங்களை எடுத்து வந்த அட்லியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நான்கைந்து குறும்படங்களில் நடித்திருக்கிறார். மிமிக்ரி, ஷார்ட் பிலிம் என தொடங்கிய சிவகார்த்திகேயனின் பயணம் தற்போது உலகளவில் ஹீட் கொடுக்கும் நடிகர் என உயர்ந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் அவரது அம்மா என்ன சொன்னாலும் செய்து விடுவாராம். அந்த வகையில் அம்மா சொன்ன பெண்ணான ஆர்த்தியை கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஆராதனா கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி சிறுவயதிலிருந்து சிவகார்த்திகேயனுடன் பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராஜசுந்தரம் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஏகன். 2008ல் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயனின் குறும்படங்களை பார்த்து சிறப்பாக நடிக்கிறாரே என ஏகன் படத்தில் அவருக்கு ஒரு குணசித்திர கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயனின் காட்சிகள் எதுவுமே ரிலீஸ் ஆன படத்தில் இடம்பெறவில்லை என்பது தான் சோகமான விஷயம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் ஏகன். ஆனால் வெளியானது மெரினா.