திடீரென கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் படம்..! நடந்தது என்ன..?

 

இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் பேஷன் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. எனினும் தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அறிவிப்புகளின் படி சிபி சக்ரவத்தி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி இதனால் அவர்களது கூட்டணி பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் இது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன் சிபி சக்ரவத்தி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் 2022ல் வெளியான 'டான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.