நானி உடன் கைக்கோர்க்கும் ஸ்ருதிஹாசன் - ஆனால்..?

நானி நடிப்பில் அடுத்து உருவாகும் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்புதிய படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். எனினும் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 
 

'தசரா' படத்திற்கு பிறகு நானி அடுத்து நடிக்கும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கான திரைக்கதை ஷோரியுவ் என்பவர் எழுதுகிறார், புதுமுகமான ஷோரு என்பவர் இயக்குகிறார்.

நானியின் இப்படத்தில் சீதா ராம் படத்தின் மூலம் நாடு முழுவதும் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் ஸ்ருதிஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

நானி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தசரா. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், 'வெண்ணெலா' வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். மேலும் சமுத்திரக்கனி, சாய் குமார், ஷம்னா காசிம் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோரும் தசரா படத்தில் நடித்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.