STAND WITH WAYANAD : வைரலாகும் நடிகர் சூரியின் முகநூல் பதிவு..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூரி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வயநாடு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்க்கும் ஆண்டவனின் துணையை வேண்டி நிற்கும் சூரி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த பதிவில் "வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும்,"
வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடும் வாழ்வாதாரமும் இழந்து உள்ளனர், அங்கிருந்து வரும் காட்சிகள் பார்க்க பார்க்க பகீரென்கிறது!! வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த நேரத்தில் களத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அந்த இறைவன் துணை இருக்க வேண்டும், அவர்கள் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள்.என பதிவிட்டுள்ளார்.