‘அமரன்’ திரைப்படத்தில் வந்த தொலைபேசி எண் - தொடர் அழைப்புகளால் அல்லாடும் மாணவர்..!!
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தால் மாணவர் ஒருவர் அல்லாடி வருவதாக அதிரிச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அமரன்’ படத்தில் நடித்த சாய் பல்லவியை பாராட்டுவதற்காக சென்னையை சேர்ந்த மாணவரின் தொலைபேசி எண்ணுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அழைத்து கொண்டிருக்கின்றனர் .
இப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசி எண் பகிர்வதுபோல் எடுக்கப்பட்ட காட்சியில் இருப்பது தனது எண் என தெரியாமல், பலரும் தொடர்ந்து Calls, Voice messages, நார்மல் மெசேஜ்கள் அனுப்புவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் .
இது குறித்து படக்குழுவினருக்கு சமூக வலைதளத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள மாணவர், இப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் கலங்கியுள்ளார்.