விரைவில் சம்மந்திகளாகும் அமிதாப் பச்சன் - ஷாரூக்கான்..!!

ஷாருக்கானின் மகள் சுஹானாவும், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் டேட்டிங்கில் இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
 

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு தற்போது 22 வயதாகிறது. இன்னும் அவருடைய முதல் படம் ரிலீஸாகவில்லை என்றாலும், அவரை குறித்து பல்வேறு சர்ச்சைகளும் செய்திகளும் உலா வருகின்றன. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒட்டுமொத்த பாலிவுட்டும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

அதாவது சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவை டேட் செய்து வருவதாக கூறப்படுகிறது. அகஸ்தியாவுக்கும் அதே வயது தான் ஆகிறது. எனினும், அவரை விட சுஹானா 6 மாதம் மூத்தவர். சுஹானா மே 2000 இல் பிறந்தார், அதே ஆண்டு நவம்பரில் அகஸ்தியா பிறந்தார். தற்போது இவர்களது முத்த வீடியோ ஒன்று, இருவரும் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக பச்சன், கான் இருவரும் உறவினர்களாகப் போகிறார்கள் என்ற செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஹானாவை போலவே அகஸ்தியாவும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளார். இருவரும் தானியா ஷெராப்பின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போது, தங்களுக்குள் பறக்கும் முத்தம் விட்டுக்கொண்டனர். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. 

பாலிவுட் நட்சத்திரக் குழந்தைகள் பார்ட்டிகளில் வருவது புதிதல்ல. அதன்படி, பிறந்தநாள் விழாவில் அகஸ்தியாவும் சுஹானும் ஒன்றாக காணப்பட்டனர். விருந்து முடிந்து சுஹானா கான் புறப்படத் தயாரானார். அப்போது, ​​சுஹானாவை காரில் ஏற்றிக் கொள்ள அகஸ்தியா வந்துள்ளார். அப்போது பறக்கும் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அகஸ்தியா அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் ஆவார். தானியா ஷெராப்பின் பிறந்தநாள் விழாவில் பல நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட வாரிசுகள் பங்கேற்றனர். இதில் ஆர்யன் கான், சஞ்சய் கபூர், மஹீப் கபூர் ஆகியோரின் மகள் ஷனாயா கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டது முக்கியமாக கருதப்படுகிறது.

வருண் தவானின் மருமகள் அஞ்சினி தவான், போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஆகியோரும் பார்டியில் காணப்பட்டனர். சுஹானா கானை காரில் ஏற்றிய அகஸ்தியா பறக்கும் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'தி ஆர்ச்சீஸ்' படத்தில் அகஸ்தியா நந்தா மற்றும் சுஹானா கான் இணைந்து நடித்து வருகின்றனர்.

இது பிரபலமான ஆர்க்கிஸ் காமிக்ஸ் தொடரின் இந்திய தழுவலாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த ஜோடி முதலில் காதலித்ததாக கூறப்படுகிறது. கபூர் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் விருந்தில் அகஸ்தியா, சுஹானாவை தனது மனைவியாக அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருவரும் படத்தின் செட்டில் அதிக நேரம் செலவழிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்க நினைக்கவில்லை. இருப்பினும், அவர்கள் அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்ல இன்னும் திட்டம் போடவில்லை என்று பாலிவுட் வட்டாரங்கள் செய்தி கூறுகின்றன.