சுஹாசினி பதிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

 

சுஹாசினி தந்தையும் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் தற்போது 93 வயதில் இருக்கும் நிலையில் அவ்வப்போது வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் தளர்வு, சோர்வு ஏற்பட்டதை அடுத்து வழக்கமான பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பரிசோதனை முடிவு அனைத்தும் பாசிட்டிவாக இருக்கும் நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சாருஹாசன் எப்போது போல் கலகலப்பாகவும் ஜோக் அடித்துக் கொண்டும் மருத்துவமனையில் இருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுஹாசினி அருகில் இருந்து அவரை பார்த்துக் கொள்வதாகவும் படப்பிடிப்பில் இருப்பதால் கமல்ஹாசன் போனில் தனது அண்ணனிடம் நலம் விசாரித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவுடன் நான் மருத்துவமனையில் இருக்கிறேன், அப்பா பழைய உற்சாகத்துக்கு திரும்பி வருகிறார், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் முழுவதுமாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.