சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்..! 

 

ஒவ்வொரு வியாழக்கிழமையும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் தரவரிசை வெளியாகி இருக்கிறது.
 

கடந்த வாரத்தில் வெளியான டிஆர்பி ரேட்டிங்படி முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்திருந்தது முதல் இடத்தில் பல வாரங்களுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 9. 11 புள்ளிகளை பெற்று வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் பல டுவிஸ்ட்கள் இருந்த நிலையில் இந்த சீரியல் மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8. 86 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.76 புள்ளிகளை பெற்று இருக்கிறது. நான்காவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகளே சீரியல் 8.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.65 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 7.44 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.43 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 7.16 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.76 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திலும் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.77 புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்திலும் இருக்கிறது.