சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ஷாக்..! கூலி படத்தில் ரஜினி இல்லாமல் எடுக்க புதிய திட்டம்..! 

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அங்கு ஒரு மைனர் ஆப்ரேஷன் அவருக்கு நடந்ததாக கூட சொல்லப்பட்டது. தற்போது ரஜினி முழுக்க ரெஸ்ட்டில் இருக்கிறார். இருந்தாலும் படப்பிடிப்பை நிறுத்த முடியாது என்பதால் ரஜினி இல்லாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். எம்ஜிஎம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களிலும் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இதில் ரஜினியும் இருக்க வேண்டிய காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினியால் தற்போது படபிடிப்பில் பங்கெடுக்க முடியாது, அதிலும் மக்கள் கூடும் இடங்களில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என சினிமா விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். முதலில் படபிடிப்பை முடித்துவிட்டு அதன் பின்னர் ரஜினியை நடிக்க வைத்து அதை சிஜி மூலம் இணைப்பதற்கான வேலைகளை பார்க்கலாம் என லோகேஷ் முடிவெடுத்திருப்பதாக வலைப்பேச்சு சேனல் தெரிவித்து இருக்கிறது.