பாபாஜி குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார்..!

 

தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.என்ன தான் இளம் நடிகர்கள் போட்டி போட்டு நடித்தாலும் தனக்கு ஈடு இல்லை என்பது போல் தள்ளாடும் வயதிலும் கெத்தாக நடித்து வருகிறார்.

தற்போது வேட்டையின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ரஜினிகாந்த் இமய மலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பத்ரிநாத், கேதார்நாத தளங்களில் வழிபாடு செய்துள்ளார். மேலும் கரடு முரடான பாதையில் சென்று பாபாஜி குகையில் தியானம் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.