அபுதாபியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபிக்கு சென்றார் என்றும் அவர் ஓய்வு எடுப்பதற்காக அபிதாவுக்கு சென்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அபுதாபி சென்ற ரஜினிகாந்த் உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர் லூலு மால் ஓனருடன் உல்லாசமாக அவருடைய சொகுசு காரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நூலு மால் ஓனர் யூசுப் அலி என்பவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் அதனால் அவரே ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை ஓட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி அபுதாபியில் ரஜினியை லூலு மால் சி.இ.ஓ சந்தித்து பேசியதாகவும் இருவரும் சில மணி நேரங்கள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து உண்மையில் ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க மட்டும் தான் அபுதாபி சென்றாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய காரணங்கள் இருக்குமா? என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.