சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இமயமலை பயணம்..?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த பிறகு இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மட்டும் அவர் இமயமலை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வரும் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் இன்று இமயமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் போது அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இமயமலையில் சில நாட்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்ட பின் மீண்டும் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அதன் பிறகு ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார் என்பதும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வந்த தகவலின்படி படத்தின் முதல் காப்பியை ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அவர் இமயமலை நோக்கி புறப்படுவார் என்று கூறப்படுகிறது.