பிரபல நடிகை அதுவும் தமிழ் நடிகையை காதலிக்கும் சுரேஷ் கோபியின் மகன்..! யார் தெரியுமா ?

 

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் கோபியின் மூத்த மகன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளைய மகன் மாதவ் கோபி ஒரு மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் மாதவ் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். அந்த நடிகை ’ரணம் என்ற’ படத்தில் நடித்த செலின் ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதலி ஒரு சிறப்பான நபர் என்றும், அவரை கொண்டாட விரும்புகிறேன் என்றும், என்னுடைய குறைகளை புரிந்து கொண்டு என்னை ஒரு முழு மனிதனாக மாற்றியது அவர்தான் என்றும், அவருடைய புன்னகை என்னுடைய வாழ்க்கையை ஒளிர செய்ததாகவும் ரொமான்ஸ் ஆக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதவ் கோபி பதிவு செய்துள்ளார்.

மேலும் என் காதலியின் குரல் இனிமையானது என்றும், அவரிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முழு ஆற்றல் கிடைக்கிறது என்றும், அவரை சந்தித்த நாளிலிருந்து என் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாதவ் கோபி மற்றும் செலின் ஜோசப் காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.