மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி...!! தயாரிப்பாளர் நம்ம சிவகார்த்திகேயன் ப்ரோ..!!
தமிழ்த் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்நிலையில், மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் நடிகர் சூரி மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் படத்தை உலக அளவில் பல விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்குக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனன்யா பென் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்தும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவா பணியாற்ற உள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை ‘எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்.
எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.