இணையத்தில் பட்டைய கிளப்பும் ‘சூர்யா 44’ பட கிளிம்ப்ஸ்..!

 

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா.

இதில் சூர்யா சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் திரையரங்கையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யா தனது 42வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு கங்குவா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 3D தொழில்நுட்பத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படமானது 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. அதேசமயம் சூர்யா, பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பிதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்டு இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் 49வது பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று (ஜூலை 23) சூர்யா 44 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் டைட்டில் டீசல் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.