சூர்யாவின் கங்குவா டிரைலர் வெளியானது... "விருந்து அருந்த வாரீரோ"..!
நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான ‘கங்குவா’படத்தில் நடித்து முடித்துள்ளார். மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியுடன் நிகழ்கால சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குனர் சிவா கங்குவா படம் மூலம் உருவாக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.