5 வருட ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த சுஷ்மிதா சென்..!
Jul 23, 2024, 08:05 IST
1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென், ‘ரட்சகன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் ஷங்கர் இயக்கிய முதல்வன் உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்தார் என்பதும் குறிப்பாக ’ஆர்யா’ என்ற தொலைக்காட்சி வெப்தொடர் அவருக்கு மிகப்பெரிய நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் நடிகை சுஷ்மிதாவுக்கு 46 வயதாகியுள்ள நிலையில் இன்னும் யாரையும் திருமணம் செய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர் வளர்த்து வருகிறார். மேலும் சமூக சேவையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ரோஹ்மன் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர். அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொழில் அதிபர் லலித் மோடியுடன் அவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க பொய் என்றும் தனக்கு இன்னொரு காதல் இல்லை என்றும் அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய மூன்றாவது காதல் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த சுஷ்மிதா சென் ’என்னுடைய முதல் காதலோடு என் காதல் வாழ்வை நான் முடித்துக் கொண்டேன். அந்த ஐந்தாண்டு காதல் வாழ்வு எனக்கு போதும், தற்போது நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை, சிங்கிளாக நான் நிம்மதியாக என் வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன், நான் வளர்க்கும் இரண்டு மகள்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், எனக்கு வேறு யாருடைய துணையும் தேவையில்லை, நான் தனிமையை உணர்ந்தால் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறேன், ஊர் சுற்றுகிறேன், என் வாழ்நாள் முழுவதும் நான் சிங்கிள் ஆகவே இருந்து விடப் போகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.