சந்திரமுகி 2 படத்தின் ‘ஸ்வாகதாஞ்சலி’ முதல் பாடல் வெளியீடு!

 

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

<a href=https://youtube.com/embed/CgQamR5tXjU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/CgQamR5tXjU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இப்படத்தில் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள நிலையில், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இருவரின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி...’ லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் ‘ரா...ரா...’ பாடலை போன்று இப்பாடலையும் உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.