பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்..! 

 

ஜாகிர் ஹுசைன் இந்தியாவின் மிகவும் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். இவர் பத்ம பூசண் மற்றும் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார். கூடுதலாக, அவர் ஒரு இசையமைப்பாளர், தாள வாத்தியக் கலைஞர், இசை தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.

மார்ச் 9, 1951 அன்று மும்பையின் மாஹிமில் தபேலா கலைஞர் அல்லா ராக்கா மற்றும் பாவி பேகம் ஆகியோருக்கு பிறந்த ஜாகிர் உசேன் மிக இளம் வயதிலேயே தபேலா வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

இவர் தனது 3 வயதில் தனது தந்தையிடமிருந்து பாரம்பரிய மிருதங்கம் தாள இசைக்கருவி வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும் 12 வயதில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான தி பீட்டில்ஸுடன் மற்றும் பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசைக் கச்சேரிகளை அரங்கேற்றம் செய்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில், 66வது கிராமி விருதுகளில் தபேலா இசைத்து ஜாகீர் உசேன் வரலாறு படைத்தார். ஒரே இரவில் மூன்று வெற்றிக் கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இவரது பெருமையை போற்றும் வகையி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் இடம்பெற்ற டெலிபோன் மணிபோல் சிரித்தவள் இவளா எனும் பாடலில், பாடலாசிரியர், கதாநாயகியை ஜாகீர் உசேன் தபேலா இவள் தானா என வர்ணித்து எழுதி இருப்பார்.

இந்நிலையில் தீவிர உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.