அந்தரங்க விஷயங்களை பேசி பிழைப்பது என்பது ஒரு நார பிழைப்பு : பயில்வானை கிழித்தெடுத்த கஸ்தூரி..! 

 

கிசுகிசு என்பது தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும் கூட தொடர்ந்து இந்த மாதிரி பேசிய காரணத்தினால் தமிழ் திரை துறையினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் பயில்வான் ரங்கநாதன்.

அதனால் திரைப்படங்களில் இப்போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை மிகவும் மோசமாக பேசி ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது பிழைப்பதற்கு நாணயமான எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால் பயில்வான் ரங்கநாதன் அதில் அசிங்கமான ஒரு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் தரமான உணவுகளை குறைவான விலையில் கொடுத்து சம்பாதிக்கின்றனர்.

ஆனால் அதே சமயம் கள்ளச்சாராயம் போதை பொருள் போன்றவற்றை விற்றும் சம்பாதிபவர்கள் இருக்கிறார்கள். அதில் பணம் நிறைய வரலாம் ஆனால் அது ஒரு பொழப்பா. அது போலதான் பயில்வான் ரங்கநாதனும், அவர் பூவித்து பிழைப்பதற்கு பதிலாக பீ வித்து பிழைக்கிறார் என்று வெளிப்படையாக கூறினார் கஸ்தூரி.

மேலும் அவர் கூறும்போது எவ்வளவோ பத்திரிகையாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் சிலர்தான் இப்படி அந்தரங்க விஷயங்களை பேசி பிழைப்பு நடத்துகிறார்கள். அந்தரங்க விஷயங்களை பேசி பிழைப்பது என்பது ஒரு நார பிழைப்பு. அதிலும் பயில்வான் ரங்கநாதன் பேசுவதெல்லாம் அதிகபட்சம் பொய்களாக தான் இருக்கிறது.

அவற்றை பார்த்து மக்களும் ஏமாந்து விடுகிறார்கள். அவர் சொல்லும் ஒரு சில விஷயங்கள் உண்மை என்பதால் அவர் பேசும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவை எல்லாமே குப்பைகள்தான்.

அவர் பேசுவதை கேட்பதற்கு தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் பீ யை வாங்க தயாராக இருப்பதால் அவர் பீயை அழகாக பேக் செய்து விற்கிறார். இது மலம் என்று மக்கள் தவிர்த்து விட்டால் பயில்வான் மாதிரியான நபர்கள் பேச மாட்டார்கள் என்று மக்களையும் வெளிப்படையாக திட்டி இருக்கிறார் கஸ்தூரி.

பயில்வான் பெண்களின் தாய்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார் அவருக்கு தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை. அவரின் தாய் பற்றி தவறாக நான் பேச விரும்பவில்லை. ஆனால் அவரின் வளர்ப்பு சரியில்லை என்று கஸ்தூரி பேசி இருப்பது அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.