வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா..!
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘வேதாளம்’ ரீமேக்கில் கதாநாயகியாக நடிப்பதற்கு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படம் வேதாளம். இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நவம்பர் 2015 தீபாவளி அன்று வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
‘போலோ சங்கர்’ என்கிற பெயரில் தயாராகி வரும் இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நாயகியாக நடிக்கவைக்க காஜல் அகர்வாலை படக்குழு பரிசீலித்து வந்தது.
ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக போலோ சங்கர் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி மற்றும் தமன்னா இருவரும் சைரா நரசிம்ஹ ரெட்டி படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.