நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாஸ் அறிவிப்பு!

 

தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இளைய தளபதி விஜய் அவர்கள்.  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் அவர்கள் சினிமாவை விட்டு விலக போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் தான் சினிமாவில் தான் நடிக்கவிருக்கும் கடைசி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக கழகம் என்ற கட்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 28-05-2024 அன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, அணி, கிளை, நகரம், ஒன்றியம், மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட யாவரும் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.