டாடா பட நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு திருமணமா ? தீயாய் பரவும் போட்டோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பங்கு பற்றியவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் பங்கு பற்றிய போது இவருக்கு ஆரம்பத்திலேயே அமோகமான வரவேற்பு காணப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் பிரதீப் ஆண்டனி தான் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பெற்ற சக பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எந்த வித விசாரணைகளும் இன்றி அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைத்தார்கள்.
இதனால் ஆரம்பத்தில் பிரதீப்க்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
எனினும் நாளடைவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை ஆணித்தரமாக முன் வைத்தார்கள். அதன் பின்பு பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் அர்ச்சனா ரவீந்திரனுக்கு சப்போர்ட் பண்ணி அவரை வெற்றி பெற வைத்தார்கள்.
இந்த நிலையில், இன்றைய தினம் பிரதீப் ஆண்டனியின் திருமண புகைப்படம் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இவ்வாறு திடீரென திருமணம் செய்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு பலரும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்..