திருச்சிற்றம்பலம் இயக்குனரின் அடுத்த படைப்பான அரியவன் படத்தின் டீஸர் வெளியீடு..!! 

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இயக்குனர் மித்ரன் ஜவஹர். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், தனுஷின் ‘யாராடி நீ மோகினி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு குட்டி, உத்தமப்புத்திரன், மதில் ஆகிய படங்களை இயக்கி வெற்றிப்பெற்றுள்ளார். 

இதையடுத்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகிய மூவர் நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 110 கோடி ரூபாய் வசூதித்தது. 

இந்நிலையில்  'அரியவன்' என்ற புதிய படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை மாரிச்செல்வன் எழுதியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் ஈஷான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரணாலி, டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெண்கள் மீதான  வன்முறைகளுக்கு எதிராக தனி ஒருவனாக போராடும் இளைஞனின் போராட்டம் இந்த படம். இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

<a href=https://youtube.com/embed/-tPCSijS7fE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-tPCSijS7fE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">