தெலுங்கு தயாரிப்பாளருக்கும் நடிகை அஞ்சலிக்கும் திருமணம்..? அதுவும் இரண்டாவது மனைவியா?

 

அழகிய தோற்றம் எதார்த்தமான நடிப்பு என தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அஞ்சலி. இன்றுவரை அஞ்சலிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதற்கெல்லாக் காரணம் அவர் தேர்வு செய்யும் படங்கள், கதாப்பாத்திரங்கள், எதார்த்தமான நடிப்பு உள்ளிட்டவை தான்.இவற்றுக்கு சான்றாக கற்றது தமிழ், அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனது தனித்துவமான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். என்னதான் சிறந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருந்து வந்தார் அஞ்சலி.

நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.தற்போது ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இவர் குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் இத்தகவல் தீயாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.அந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது.ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கம் இரண்டு பேருக்கும் காதலாக மாறியிருக்கிறது என்றும் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.