தாய்லாந்து பீச்சில் பிகினி உடையில் கோமாளி பட நடிகை..! 

 

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார் கன்னட திரையுலகின் பிரபல நடிகையான சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு ’கோமாளி’ ’பப்பி’ ’தேள்’ ’மன்மத லீலை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் தற்போது கூட ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தாய்லாந்து பீச்சில் டூபீஸ் நீச்சல் உடையுடன் மரத்தில் ஒரு கயிறு கட்டி அதில் தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு தனது பிறந்தநாளின் போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் பீச்சில் இருப்பது எப்போதுமே தனக்கு வைட்டமின் போன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட் மற்றும் லைக் குவிந்து வருகிறது.