தளபதி அரசியல் பிரவேசம்... நடிகர் கருணாஸ் சொன்ன அட்வைஸ்...

 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ் , விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். 

உங்களை வேடிக்கை பார்ப்பது வேற ஓட்டு போடுறது வேற. வேற ஒரு சின்னத்துக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு பழகுன ஒருத்தர மாத்தி இன்னொரு சின்னத்துக்கு ஓட்டு போட வைக்கிறது லேசான வேலை இல்ல. விஜய் பெரிய நடிகரா அல்லது உதயநிதி பெரிய நடிகரானு கேட்டா விஜய்னு சொல்லலாம். அதே அரசியல்ல யாரு பெரியவர்னு கேட்ட அது உதயநிதிதான்.  

எம்ஜிஆரின் அரசியலை ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும். அவருடைய உழைப்புகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். எம்ஜிஆருக்கு வருகிற கூட்டம் மாதிரி விஜய்க்கும் வருகிறது. அப்போ விஜய் கண்டிப்பாக அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைவார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்

வடிவேலு சார் ஒரு தடவை அரசியலுக்காக கெம்பிக் போனாரு அவ்வளோ கூட்டம் வந்தது யாரென அது ஓட்ட மாறாவில்லை. விஜய்க்கு திடிர்னு ஏன் சார் அரசியல் ஆசை வந்துச்சி? இவ்வளோ வருசமா இருந்திங்களே இவ்வாலோ பிரச்சினை நடந்துச்சு அப்ப எல்லாம் ஒன்றுக்குமே குரல் கொடுக்காதா நீங்கள் இன்னைக்கு திடிர்னு அரசியலுக்கு வந்திங்க? ஜெயலலிதா அம்மாவா பாக்குறதுக்கு போனாரு ஆனா அம்மா அவங்கள பாக்ககூட இல்ல. யாரு கட்சி ஆரம்பிச்சாலும் கொடிபுடிக்க தமிழன் தயாராக இருப்பான். இது எல்லாம் விஜய் கிட்டத்த்தான் சொல்லணும் அரசியல் அவ்வளவு எளிமையானது அல்ல என்று கூறியுள்ளார்.