டிவி சேனலை வாங்கப் போகும் தளபதி விஜய்..?

 

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய் இரண்டு வருடத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலையில் இறங்க உள்ளார். இதற்காக புதிய டிவி சேனல் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கும் காரணத்தினால் ஏற்கனவே இருக்கும் தொலைக்காட்சி சேனல் ஒன்றை விலைக்கு வாங்க முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி கேப்டன் டிவி சேனலை விலைக்கு வாங்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை இந்த டிவி சேனலை தளபதி விஜய் வாங்கி விட்டால் சேனலுக்கு தளபதி டிவி என பெயர் வைக்கவும் முடிவு எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.