தளபதி விஜய் மகனுக்கு உருக்கமான பதிவுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்.!
Jul 26, 2025, 08:05 IST
இன்றைய தினம் (ஜூலை 26, 2025) ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இது சாதாரணமாக இல்லாமல், அவர் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பொழுதாக இருக்கிறது என்பதால், இவ்வாண்டு பிறந்த நாள் அவருக்கு சிறப்பானதாக காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு, ஜேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சுந்தீப் கிஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Happy birthday to my director man…” என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.