தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணை தாண்டி வருவாயா... சிம்பு நடிக்கும் புதிய படம் போஸ்டருடன் அறிவிப்பு..!

 

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே, கையில் கருப்பு ஒயரும், ‘தம்’ படத்தின் விரல் முத்திரையும், மற்றொரு கையில் கர்சீஃப் என 90’ஸ் கிட்ஸ்கள் பார்த்த சிம்பு தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மீண்டும் திரும்பியிருக்கிறார். பளிச்சிடும் போஸ்டரும், சிம்புவின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ள சிம்பு, “கட்டம் கட்டி கட்றோம்” என பதிவிட்டுள்ளார்.

சிம்புவை பொறுத்தவரை அவர், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.