ரஜினியுடன் முதன்முறையாக இணையும் தேசிய விருது வென்ற நடிகர்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘லால் சலாம்’ மற்றும் த.செ. ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

தற்போது லால் சலாம் படத்திற்கான ஷூட்டிங் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் நடந்து வருகிறது. கதாநாயகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவருடன் பிரபல குணச்சித்திர நடிகரும் தேசிய விருது வென்றவருமான தம்பி ராமைய்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பி ராமைய்யா நடித்து வருகிறார். ஆனால் ரஜினிகாந்துடன் அவர் நடிப்பது இதுவே முதல்முறை. ரஜினிகாந்துக்கும் தம்பி ராமைய்யாவுக்கும் மிகவும் அதிரடி சரவெடி சிரிப்பு வெடி காமெடி காம்போ தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.