வசூல் வேட்டை நடத்தும் தங்கலான் திரைப்படம்..!
Aug 20, 2024, 07:35 IST
பா.ரஞ்சித்தின் மிரட்டலான இயக்கத்தில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன் பசுபதி உள்ளிட்ட பல திரைக்கலைஞர்களின் துணிச்சலான நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் அசத்தலாக உருவமைக்கப்பட்ட இப்படம் கடந்த 15 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலிலும் அசத்தி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தங்கலான் திரைப்படம் உலகளவில் தற்போது வரை 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.