அந்த மனசு தான் சார் கடவுள்... KPY பாலாவின் நெகிழ்ச்சி செயல்..! 

 

கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கேபிஓய் பாலா.

சின்னத்திரையில் கலக்கி வந்த இவருக்கு, திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்க அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய் சேதுபதி நடித்த ஜிங்கா திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானார்.

அத்துடன் பல செலிப்ரட்டிகள் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகளில் அவர்களை கலாய்ப்பது, பிராங்க் செய்வது உள்ளிட்டவற்றை செய்து மக்களிடையே பிரபலமாக காணப்படுகின்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் இடம்பெற்ற புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்த இவர், வீடு வீடாக சென்று பண உதவிகளையும், ஊனமுற்றவர்களுக்கு வாகன உதவிகளையும் கொடுத்து பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவருடைய சமூகப் பணிகளை பார்த்த ராகவா, தற்போது இவருடன் இணைந்து பல்வேறு ஏழை எளியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது பாலா மற்றும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளார். அதாவது தாய் ஒருவருக்கு தள்ளு வண்டி வைத்து அதில் அவருடைய வருமானத்தை ஈட்டி கொடுக்கும் வகையில் வாழ்வாதார உதவியை செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

 இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்க அம்பானியா இருந்தா இந்தியால ஒரு பிச்சைக்காரன் கூட இருக்க முடியாது என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.