அந்த மனசு தான் சார் கடவுள்... KPY பாலா கொடுத்த சர்ப்ரைஸில் நெகிழ்ந்து போன நபர்..! 

 
KPY பாலா தனக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் ஏழைகளின்  கண்ணீர் துடைத்து வருகின்றார். அதன்படி, குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் என தனது கண்ணுக்கு பட்ட அத்தனை பேருக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகின்றார். தற்போது இவருடன் இணைந்து ராகவா லாரன்ஸ் மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது  தனது கையை இழந்த ஒருவருக்கு பிளாஸ்டிக் கை கொண்டு போய் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணி உள்ளார் KPY பாலா. 

இதைப் பார்த்த அவர் நெகிழ்ச்சியில் பாலாவை கட்டிப்பிடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது பாலாவின் இந்த செயலுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து  வருகின்றன.