பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ தந்தையாக நடித்தவர் திடீர் மரணம்..!!

 

2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். இந்தப் படத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி,  ‘பூ’ ராம், யோகிபாபு, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவர் அப்படத்தில் நாயகன் பரியனின் தந்தையாக நடித்திருப்பார். படத்திலும் தெருக்கூத்து கலைஞராக வரும் இவர் மீது ஒடுக்கம் செலுத்தப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான இவர் படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் தெருக்கூத்து கலைஞராக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தங்கராஜ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு மின்சார வசதியில்லாத வீடு ஒன்றில் வசித்து வந்தார். 

இதனால் நெல்லை தங்கராஜுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலகினரும், ஏனைய கலைஞர்களும் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.