மாஸ் காட்டும் ஜெய்லர்..! படக்குழு வெளியிட்ட பதிவு..!

 

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.375.40 கோடி வசூல் செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரவ பூர்வமான அறிவிப்பினை பகிர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக வசூலை குவித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை ஜெயிலர் படம் பெற்றுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றன.